காங்கேயத்தில் கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

X
காங்கேயத்தில், சட்டவிரோதமாக கிராவல் மண் மற்றும் கற்கள் கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதை யொட்டி, திருப்பூர் மாவட்ட கனிமம் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி எத்திராஜ் தலைமையில் அலுவலர்கள் காங்கேயம் பாரதியார் நகர் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கிராவல் மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் ஏற்றி வந்த மண்ணுக்கு உரிய அனுமதி ஏதும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து, லாரி உரிமையாளர் மற்றும் டிரைவர் மீது காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து கிராவல் மண் கடத்திய அந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைத்தனர்.
Next Story

