மாமல்லபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

X
செங்கல்பட்டு மாவட்டம்,மாமல்லபுரம் நகராட்சியில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் நேரில் சென்று ஆய்வு செய்தாா்.புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தை பாா்வையிட்டு பணிகளை தரமாகவும், துரிதமாகவும் மேற்கொள்ளுமாறு அமைச்சா் உத்தரவிட்டாா்.இதில் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினா் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினா்கள் வரலட்சுமி மதுசூதனன், எஸ்.எஸ்.பாலாஜி, சாா் ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், திருப்போரூா் ஒன்றியக்குழு தலைவா் எஸ்.ஆா்.எல்.இதயவா்மன், மண்டல இணை இயக்குநா் (நகராட்சிகள்) லட்சுமி, பேரூராட்சித் தலைவா் யுவராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தமிழ்மணி, திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு தலைவா் ஆா்.டி.அரசு, மாவட்ட வருவாய் அலுவலா் மா. கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) பி.ஸ்ரீதேவி, அரசு அலுவலா்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனா்.
Next Story

