தாராபுரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

X
தாராபுரம் வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், சாலை பாதுகாப்பு மற்றும் தலை கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. பேரணிக்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் பழனியப்பன் தலைமை தாங்கினார். பேரணியை தாராபுரம் சார்பு நீதிபதி சக்திவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன், உரிமையியல் நீதிபதி பாண்டி மகாராஜா, குற்றவியல் நீதிபதி உமாமகேஸ்வரி, மோட்டார் வாகன ஆய்வாளர் தீபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாராபுரம் கோர்ட்டு வளாகத்தில் இருந்து பேரணி தொடங்கி அமராவதி சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியின் போது கல்லூரி மாணவ- மாணவிகள் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசத்தின் அவசியம் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு சென்றனர். பேரணி முடிவில், போக்குவரத்து விதிகளை மீற மாட் டோம், கட்டாயம் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிந்து செல்வோம், செல்போன் பேசிக் கொண்டு இருசக்கர வாகனத்தை ஓட்ட மாட்டோம் என மாணவ- மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
Next Story

