ஹாக்கி மைதானத்தை பார்வையிட்ட துணை முதல்வர்

மதுரையில் அமைக்கப்பட்டு வரும் ஹாக்கி மைதானத்தை இன்று துணை முதல்வர் பார்வையிட்டார்.
மதுரை மாவட்ட விளையாட்டு வளாகத்தில் உள்ள ஹாக்கி விளையாட்டு மைதானத்தை மேம்படுத்துவது உட்பட பல்வேறு பணிகள் ரூ.20 கோடி மதிப்பில் நடைபெற்று வருகின்றன. புதிய டர்ஃப் - கேலரி உள்ளிட்ட வசதிகளுடன் புதுப்பொலிவு பெறவுள்ள இந்த மைதானத்தை இன்று (செப் .24)ஆய்வு செய்தார் . ஹாக்கி மைதானத்தை மேம்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.
Next Story