கோவை: ரேஷன் அட்டைதாரர்கள் குறைகளை முன்கூட்டியே தெரிவிக்கலாம்: உணவு ஆணையத் தலைவர் உறுதி !

கோவை: ரேஷன் அட்டைதாரர்கள் குறைகளை முன்கூட்டியே தெரிவிக்கலாம்: உணவு ஆணையத் தலைவர் உறுதி !
X
கோவையில் நடைபெற்ற மண்டல ஆய்வுக் கூட்டத்தில் பேசிய சுரேஷ் ராஜன் – நுகர்வோர் பிரச்சனைகள் 98% தீர்வு காணப்பட்டிருப்பதாக கூறினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு உணவு ஆணையம் சார்பில் மண்டல ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன், நுகர்வோரின் பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்களில் பெரும்பாலானவை உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தாயுமானவர் திட்டத்தின் மூலம் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவதால் மக்கள் பயன்பெறுவதாகவும் கூறினார். அரசின் இருப்பில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாகவும், பகுதி நேர ரேஷன் கடைகள் தேவைக்கு ஏற்ப திறக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ரேஷன் கடைகளில் எடைப்போடும் இயந்திரங்கள் தொடர்பான பிரச்சனையும் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார். ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் அவற்றை முன்கூட்டியே தெரிவிக்கும்பட்சத்தில் உடனடியாக தீர்வு காணப்படும் என சுரேஷ் ராஜன் உறுதியளித்தார்.
Next Story