வெள்ளியணை- பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா.
வெள்ளியணை- பசுமை தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா. தமிழகத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக வனப்பரப்பை அதிகரிக்கும் நோக்கோடு 2022 செப்டம்பர் 24ம் தேதி பசுமை தமிழ்நாடு இயக்கம் துவங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் உள்ள வனபரப்பு 23.98 சதவிகிதத்தை வரும் 2030-33 ஆம் ஆண்டுக்குள் 33 சதவிகிதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு 265 கோடி மரங்கள் நடுவதற்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் செப்டம்பர் 24 ஆம் தேதி பசுமை தமிழ்நாடு இயக்கமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக இன்று கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியில் செயல்படும் அமராவதி கலை அறிவியல் கல்லூரியில் பசுமை தமிழ்நாடு தினம் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. கல்லூரியின் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற விழாவில்சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்ய மீண்டும் மஞ்சப்பை பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலர் சண்முகம் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி உள்ளிட்ட கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Next Story





