குடியிருப்பு கட்டுமான பணிகளை ஆய்வு செய்த துணை முதல்வர்

மதுரை மாவட்டம் தேனூர் அருகே குடியிருப்பு பணிகளை துணை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார்
மதுரை மாவட்டம் சோழவந்தான் தேனூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகள் - திருநங்கைகள் ,விளிம்பு நிலை மக்களுக்கென அரசு சார்பில் இடம் வழங்கப்பட்டு, ஒரே பகுதியில் 195 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இந்தக் குடியிருப்பு கட்டுமானப் பணிகளை இன்று (செப் .24) உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த வீடுகளை விரைந்து கட்டி முடித்துப் பயனாளிகளிடம் ஒப்படைக்குமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், அமைச்சர் மூர்த்தி, தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.
Next Story