முன்னாள் அமைச்சர் தலைமையில் ஆய்வுகூட்டம்
இன்று 24.09.2025 காலை 10.00 மணிக்கு கடத்தூர் MCS மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தருமபுரி மேற்கு மாவட்ட தி.மு.க வழக்கறிஞர் அணி சார்பாக ஆலோசனை மற்றும் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் தருமபுரி மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் முன்னிலையிலும், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் வழக்கறிஞர். T.சந்திரசேகர் தலைமையிலும் நடைபெற்றது.இக்கூட்டத்தில் வாக்குச்சாவடி வாரியாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், செயல்படுத்துவதை வாக்குச்சவாடி முகவர்கள்(BLA-2) அப்பணியில் ஈடுபடுத்தி ஆய்வு செய்வது குறித்தும், கூடுதல் வாக்குச்சாவடிகள் அமைவது குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.இக்கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர்மனோகரன் Ex.MLA,பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி தேர்தல் பார்வையாளர்கள் எவரெஸ்ட் நரேஷ்குமார்,ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், உட்பட சட்டமன்றத் தேர்தல் பணி ஒருங்கிணைப்பாளர்கள், பொறுப்புக்குழு உறுப்பினர்கள் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வழக்கறிஞர்கள் என பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
Next Story




