பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் , வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் வனத்துறையின் சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அடுத்த 10 ஆண்டுகளுக்குள் ஒவ்வொரு ஆண்டும் 32 கோடி மரக்கன்றுகள் நடும் மாபெரும் திட்டமான பசுமை தமிழ்நாடு இயக்கத்தை கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று தொடங்கி வைத்தார்கள். தமிழ்நாடு அரசு காடு மற்றும் மரங்களின் பரப்பளவை மாநிலத்தின் மொத்த பரப்பளவில் 33 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்ற இலக்குடன் பசுமை தமிழ்நாடு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. மரக்கன்றுகளை நடுவதால் புவி வெப்பமடைதல் குறையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பல்லுயிர் பெருக்கம், காலநிலை மாற்றம் கட்டுபடுதல், நீர்வளம் பாதுகாப்பு, காடுகளின் பரப்பளவு உயர்த்துல், மண் அரிப்பு தடுத்தல், நிலத்தடி நீர்மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் நடைபெறுகிறது.அந்த வகையில் இன்றைய தினம் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு வேம்பு, புங்கன், நாவல், நீர்மருது, பாதாம், மகிழம் உள்ளிட்ட 200 மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இதன் உயரிய நோக்கம் என்பது மரக்கன்றுகளை தொடர்ச்சியாக நட வேண்டும். மரக்கன்றுகள் நடுவதன் மூலம் நம் தலைமுறை கடந்தும் நமது சந்ததிகளை அது பாதுகாக்கும். காற்று மாசு தடுக்கப்படுகிறது. எனவே இன்றைய இளைய தலைமுறைகள் அதிகளவில் மரக்கன்றுகளை நடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பசுமைப் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ், உட்பட துறைச் சார்ந்த அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story