மோட்டர் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி

X
திண்டுக்கல் அருகே உள்ள கொண்டசமுத்திரப்பட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயராம் (62) இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேடசந்தூருக்கு புறப்பட்டு வந்தார். திண்டுக்கல் - கரூர் நான்கு வழிச்சாலையில் லட்சுமணன்பட்டியில் சென்று கொண்டிருக்கும்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையில் இழந்து தாறுமாறாக சென்று கீழே விழுந்ததில் ஜெயராம் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது அக்கம்பக்கம் இருந்தவர்கள் அவரைமீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் அங்கு தீவிர சிகிச்சை பெற்று பலன் அளிக்காமல் உயிர் இழந்தார் இது குறித்து வேடசந்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

