திருச்செங்கோடு இளையாம்பாளையம் விவேகானந்தா மகளிர் கல்லூரியில் ஊட்டச்சத்து மாத விழா மாவட்ட ஆட்சியர் பங்கேற்றுஊட்டச்சத்தின் அவசியம் குறித்து மாணவிகளுக்கு அறிவுரை
Tiruchengode King 24x7 |24 Sept 2025 5:30 PM ISTதிருச்செங்கோடுவிவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி தலைமையில், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் போஷன் அபியான் - தேசிய ஊட்டச்சத்து மாத விழா -2025 விழிப்புணர்வு நிகழ்ச்சிநடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, கூறியதாவது, நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு 17.09.2025 முதல் 16.102025 வரை கொண்டாட அறிவுரை வழங்கப்படுகிறது. அதனடிப்படையில் நாமக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின்கீழ் "ஆரோக்கியமான பெண் வலிமையான குடும்பம்" என்ற தலைப்பின் கீழ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினம் விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியுடன் இணைந்து மாவட்ட அளவிலான போஷான் மா நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவ கல்வி, ஆரம்பகால குழந்தை பராமரிப்பு மற்றும் மூளையின் தூண்டுதலுக்கான பயிற்சிகளும் விழிப்புணர்வு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கர்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு குழந்தை மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவூட்டும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊட்டச்சத்து பற்றாக்குறை இல்லாத குழந்தைகளை உருவாக்க போஷான் மா நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. சுற்றுப்புற சூழலை மேம்படுத்த தாயின் பெயரில் ஒரு மரம் என்ற தலைப்பில் மரம் நடுதலை ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. வளரிளம் பெண்கள் மற்றும் பெண்களிடையே காணப்பட கூடிய இரத்த சோகையினை குறைக்கும் வகையில் இரும்புச் சத்து மற்றும் புரத சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளவும் தன்சுத்தம் பேணுதல் குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. நாம் இயற்கையோடு சேர்ந்து ஆரோக்கியமாக வாழக்கூடிய சரிவிகித உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும். ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலையை அடைய நாம் அனைவரும் உறுதிமொழி ஏற்க வேண்டும். தேசிய ஊட்டச்சத்து மாதத்தில், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதை நாம் உறுதி செய்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தை வளமான, ஆரோக்கியமான மாவட்டமாக முன்னெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என கூறினார் அதனைத்தொடர்ந்து, தேசிய ஊட்டச்சத்து மாதம் – 2025 முன்னிட்டு நடத்தப்பட்ட அடுப்பில்லா சமையல் போட்டி, போஸ்டர் உருவாக்கும் போட்டி, மாறுவேடப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, வழங்கினார். தொடர்ந்து, தேசிய ஊட்டச்சத்து மாத விழா -2025-ல் அடுப்பில்லா சமையல் கண்காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி, பார்வையிட்டு, மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.தொடர்ந்து, பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி தி.காயத்திரி அவர்களும், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி ஜி.கற்பகம் அவர்களும், உடல் பருமனை கையாளுதல், பாரம்பரிய உணவுகள், நடைமுறைகள் குறித்து குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்ளும் எடுத்துரைத்தனர். இந் நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் பி.போர்ஷியா ரூபி, எலச்சிபாளையம் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் வி.வள்ளிநாயகி, விவேகாந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி முதல்வர் முனைவர் பி.பேபி ஷகிலா, தாளார் (ம) செயலர் டாக்டர் எம்.கருணாநிதி, கல்லூரி மாணவியர்கள், துறைசார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story


