வாலிபர் குடிபோதையில் கத்தியை காட்டி பேருந்தில் ரகளை

X
திண்டுக்கல் சீலப்பாடி, பைபாஸ் அருகே குளித்தலை செல்லும் அரசு பேருந்தில் குடிபோதையில் வாலிபர் கத்தியால் பேருந்தில் சீட்டுகளை கிழித்து பயணிகளை கத்தியால் குத்த சென்று மிரட்டி ரகலையில் ஈடுபட்டதால் பயணிகள் பதற்றம். தொடர்ந்து பயணிகளை தாக்க முற்பட்டதால் பேருந்தை நிறுத்தி போலீஸ் சாருக்கு தகவல் தெரிவித்து பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர். உடனே வாலிபர் அப்பகுதியில் நடந்து சென்ற மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை கத்தியை வைத்து மிரட்டி அச்சுறுத்தல் ஏற்படுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் ஒன்று சேர்ந்து ரகலையில் ஈடுபட்ட இளைஞரை பிடித்து நைய புடைத்து கட்டி வைத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வாலிபரை பிடித்து கத்தியை பறிமுதல் செய்தனர். மேலும் தாலுகா காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். தாலுகா காவல் நிலைய போலீசார் அவரை சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

