கல்லூரி மாணவர் தலைநசுங்கி பலி, மற்றொரு மாணவர் படுகாயம்

கல்லூரி மாணவர் தலைநசுங்கி பலி, மற்றொரு மாணவர் படுகாயம்
X
திண்டுக்கல் சாலையூர் பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து, கல்லூரி மாணவர் தலைநசுங்கி பலி, மற்றொரு மாணவர் படுகாயம்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த பசுபதி பாண்டி மற்றும் வெற்றிச்செல்வன் ஆகியார் திண்டுக்கல் -கரூர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேச்சுரோபதி பாட பிரிவில் படித்து வருகின்றனர். திண்டுக்கல்லில் தங்கி படித்து வந்த இருவரும் கல்லூரி முடித்து தாங்கள் ரூமிற்கு ஒரு இருசக்கர வாகனத்தில் செல்லும்போது சாலையூர் பிரிவு அருகே நிலை தடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தனர், அப்போது பின்னால் வந்த தனியார் பேருந்து பசுபதி பாண்டி என்பவர் தலை மீது ஏறி இறங்கியதில் அவர் தலை நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த வெற்றி செல்வன் என்பவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தாடிக்கொம்பு காவல் நிலைய போலீசார் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story