ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் காலமானார்

ஐஏஎஸ் அதிகாரி பீலா ராஜேஷ் காலமானார்
X
உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக அரசின் எரிசக்தி துறை செயலாளருமான பீலா வெங்கடேசன் காலமானார். அவருக்கு வயது 56.
கோவிட் காலத்தில் சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றினார். இதன் பிறகு பல்வேறு துறைகளில் பணியாற்றினார். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக 2 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார். தமிழகத்தில் செங்கல்பட்டு துணை கலெக்டர், நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் இயக்குநர், மீன்வளத்துறை இயக்குநர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், சுகாதாரத்துறை செயலாளராக, 2019 பிப்., மாதம் பொறுப்பேற்றார். 2020 ல் வணிக வரித்துறைக்கு மாற்றப்பட்டார். இதன் பிறகு, தற்போது கடைசியாக எரிசக்திதுறை முதன்மை செயலாளராக பணியாற்றினார்.
Next Story