அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள்

X
Komarapalayam King 24x7 |24 Sept 2025 8:57 PM ISTகுமாரபாளையத்தில் அருகே அனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்டன.
குமாரபாளையம் பைபாஸ் சாலையிலிருந்து தட்டான்குட்டை ஜெய்ஹிந்த் நகர் செல்லும் வழியில் சமூக ஆர்வலர்கள் பலர் பல மரங்கள் நட்டு வைத்து, வளர்த்து வந்தனர். இதனை மர்ம நபர்கள் பலர் பல மரங்களை வெட்டியுள்ளனர். அனுமதி இல்லாமல் மரங்களை வெட்டக்கூடாது என அரசு சார்பில் அறிவித்த நிலையில், இது போல் அனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டப்பட்டுள்ளமைக்கு, மரங்கள் நடும் ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது பற்றி மரங்கள் நடும் ஆர்வலரும், தே.மு.தி.க. மாவட்ட பொருளாருமான மகாலிங்கம் கூறியதாவது: மரங்கள் மழை வளத்திற்கு அவசியமான ஒன்று. நாங்கள் இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் நட்டு பராமரித்து வருகிறோம். அரசு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு மரங்கள் நட்டு வைத்து, பராமரிப்பு செய்ய கற்றுத் தருகிறோம். தட்டான்குட்டையில் மரங்கள் வெட்டப்பட்டது கடும் கண்டனத்திற்குரியது. மரங்களை வெட்டியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
