போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
X
முத்தையாபுரத்தில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு
தூத்துக்குடி சூசை நகர் பகுதியில் முத்தையாபுரம் காவல் நிலையம் சார்பாக பள்ளி மாணவர்கள் மற்றும் வாலிபர்களிடம் போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியபோது போதை பழக்கவழக்கங்களால் ஏற்படக்கூடிய தீமைகள் பற்றியும், உடல் ஆரோக்கியத்தை பேணி காப்பது குறித்து மாணவர்கள் மற்றும் வாலிபர்களிடம் எடுத்துரைத்தார். அதன்பின் அனைவரும் போதைப் பொருளுக்கு எதிராக உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதன்பின்னர் சூசை நகர் பகுதியில் வசிக்கக்கூடிய ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ், தனிப்பிரிவு காவலர் ஜாண்சன், தலைமை காவலர் சந்திரமோகன், அதியகராஜ் மற்றும் ஜே எஸ்.நகர் அந்தோனி, மற்றும் பாதர் வில்லியம்ஸ் ஆகியோர் விளையாட்டு உபகாரணங்களை வழங்கினார். முத்தையாபுரம் காவல்துறையினரின் இத்தகைய செயலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்பர்ட் ஜான், ஏஎஸ் பி மதன் மற்றும் அப்பகுதி மக்கள் பரட்டினர்.
Next Story