பாகலூர் அருகே டூவீலர் மீது கார் மோதி தொழிலாளி உயிரிழப்பு.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் அருகே உள்ள பி.தாசரப்பள்ளியை சேர்ந்தவர் எல்லப்பா (40) கூலித் தொழிலாளியான. இவர் கடந்த 22-ஆம் தேதி அன்று ஜி.மங்கலம் சாலை தாசப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே டூவீலரில் சென்ற போது அந்த வழியாக சென்ற கார் டூவீலர் மீது மோதியது. இதில் படு காயம் அடைந்த எல்லப்பாவை அங்கி ருந்தவர்கள் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி எல்லப்பா உயிரிழந்தார். இதுகுறித்து பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story

