எம்பி தலைமையில் திமுக நிர்வாகிகள் கூட்டம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் மணி தலைமையில் இன்று புதன்கிழமை மாலை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இளைஞர் அணி நிர்வாகிகள் தெருமுனை கூட்டங்கள் நடத்த வேண்டும். தமிழக அரசின் சாதனைகளை பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும். தொடர்ந்து அக்டோபர் 2 ந் தேதி கோவையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி மண்டல மாநாடு நடைபெறுகிறது இந்த மாநாட்டிற்கு இளைஞர் அணி மற்றும் மாணவரணி நிர்வாகிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இக்கூட்டத்தில் தேர்தல் பொறுப்பாளர் செங்குட்டுவன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் சுப்பிரமணி நகர செயலாளர் நாட்டார் மாது இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய செயலாளர்கள் இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story









