பர்கூர் அருகே ஜவுளி வியாபாரி மாத்திரைகனை தின்று தற்கொலை.

X
கிருஷ்ணகிரி மவட்டம் பர்கூர் அருக உள்ள குண்டலகுட்டையை சேர்ந்தவர் கோவிந்த ராஜ் (50). இவர் பர்கூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த வியாபாரத்தில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் மன உளைச்சலிருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் நேற்று முன்தினம் வீட்டில் கோவிந்தராஜ் அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த வந்த பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு ஜவுளி வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா. வேறு காரணம் ஏதாவது உள்ளதா என்பது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

