குமரி : கடலோரப் பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் அறிவிப்பு

X
குமரி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு இந்திய கடல் சார் ஆய்வு மையத்தின் சார்பில் ஆரஞ்சு அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை இன்றும், நாளையும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கள்ளக் கடலாக இருக்கும் என்பதால், கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும், தாழ்வான பகுதிகளில் உள்ள மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பாக கட்டி வைக்க வேண்டும் எனவும், சுற்றுலா பயணிகள் கடலோரப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Next Story

