பொறியியல் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

X
குமரி மாவட்டம் தக்கலை அருகே முத்துலகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் பென்சாம் (47) மகள் ஜெபிக்ஷா ஸ்டேனி (19). கருங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். 23ஆம் தேதி மாலை சுமார் 5.45 மணி அளவில் ஜெபிக்ஷா ஸ்டேனி படுக்கை அறையில் துப்பாட்டாவால் தூக்கு போட்டு தொங்கிய நிலையில் கிடந்தார். உறவினர்கள் உடனடி அவரை மீட்டு குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனையில் ஜெபிக்ஷா இறந்தது தெரிய வந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து அவர் தந்தை பெஞ்சமின் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். முதற்கட்ட விசாரணையில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ஜெபிக்ஷா மனநலம் சரியில்லாத நிலையில் அவர் தொடர்ச்சியாக சிகிச்சையிலும் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அடிக்கடி சாகப்போகிறேன் என்றும் கூறி வந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story

