கல்லூரி முன்பு கஞ்சாவுடன் வாலிபர் கைது

கல்லூரி முன்பு கஞ்சாவுடன் வாலிபர் கைது
X
மார்த்தாண்டம்
மார்த்தாண்டம் போலீசார் விரிகோடு பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது விரிவோடு பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி அருகே வாலிபர்  ஒருவர் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டு இருந்தார். அந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்த போது, அவர் கண்ணகோடு பகுதி சலீம் மகன் ஷபா நதில் (25) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து 15 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. வாலிபரை  போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து கஞ்சா கல்லூரி மாணவர்களுக்கு விற்பனைக்கு  வைத்திருந்தாரா?  அவருக்கு கஞ்சா எப்படி கிடைத்தது?  என்பது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வாலிபர் ஷபா நதில் மீது  பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story