முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்

முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம்
X
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்த முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் படைவீரர்கள்/ சார்ந்தோர்கள் மற்றும் படைவீரர் அவர்களைச் சார்ந்தோர்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 44 மனுக்கள் அளித்தனர். இக்கூட்டத்தில் 09 நபர்களுக்கு கல்வி உதவித்தொகை, 03 நபர்களுக்கு திருமண மானியம் என மொத்தம் 12 நபர்களுக்கு ரூ.2.67 இலட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து போர்ப்பணி ஊக்க மானியத் தொகை வழங்கப்பட்ட 05 பெற்றோர்களுக்கு வெள்ளிப் பதக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயபாரதி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தெய்வம், முன்னாள் இராணுவத்தினர் மருத்துவமனை பொறுப்பு அலுவலர் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கர்னல் வீரமணி, முன்னாள் படைவீரர்கள், அவர்தம் குடும்பத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story