சங்கரன்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடைபெற்றது

X
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தனியார் திருமண மண்டபத்தில் வைத்து உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் அனைத்து பகுதிகளிலும் நடைபெறவுள்ளது. இந்த முகாமை தென்காசி திமுக வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா துவக்கி வைத்தார். இந்த முகாமில் சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் உள்ளிட்டவை இந்த முகாமில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் நகர மன்ற தலைவி கௌசல்யா வெங்கடேஷ், சங்கரன்கோவில் வார்டு கழக செயலாளர் வீரமணி செய்த அலி, தடியரன், சரவணன உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.
Next Story

