கோவை புறநகரில் போலீசுக்கு டிமிக்கி கொடு வந்த கஞ்சா கும்பல் கைது - கஞ்சா பறிமுதல் !

கோவை புறநகரில் போலீசுக்கு டிமிக்கி கொடு வந்த கஞ்சா கும்பல் கைது - கஞ்சா பறிமுதல் !
X
சூலூரில் கஞ்சா கடத்தி விற்று வந்த மொத்த வியாபாரிகள் உட்பட மூன்று பேர் கொண்ட கும்பலை, சூலூர் போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் தென்னம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக சூலூர் காவல் நிலையத்திற்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றுகொண்டிருந்த ஒரு இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கேரளாவைச் சேர்ந்த ரினு என்பதும், கஞ்சா விற்பனைக்காக நின்றுகொண்டிருந்ததும் தெரியவந்தது. அவரிடம் தொடர்ந்து விசாரித்தபோது, சரவணகுமார் என்பவருடன் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, கணியூரில் இருந்த சரவணகுமாரை கைது செய்து விசாரித்ததில், போலீசாருக்கு நீண்ட காலமாக டிமிக்கி காட்டி வந்த கனி என்ற நபரிடம் இருந்து கஞ்சாவை வாங்கி விற்று வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. உடனடியாக, தென்னம்பாளையம் பகுதியில் பதுங்கியிருந்த கனியை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கனி ஈரோடு பகுதியில் இருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து, இவர்களைப் போன்ற சப்ளையர்கள் மூலம் விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும், கனி மீது ஏற்கனவே பல கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது. மூன்று பேரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Next Story