ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொது செயலாளர் பொன்.பாலகணபதி
இராமநாதபுரம்திமுகஅளித்த வாக்குறுதிகளில்நிறைவேற்றப்படவில்லை ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிக்கு ஒரு பிடி மண்ணை கூட எடுத்துக் கொடுக்காத திமுக: தமிழக முதல்வர் ராமநாதபுரம் வருகைக்கு எதிர்ப்பு பாஜக கருப்பு கொடி காட்ட போவதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன்.பால கணபதி பேட்டி. திமுக தேர்தல் வாக்குறுதிகளில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அளித்த வாக்குறுதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில் ராமநாதபுரம் வரும் தமிழக முதல்வருக்கு பாஜக சார்பில் கருப்புக்கொடி காட்டப்படும் என பாஜக மாநில பொதுச் செயலாளர் பொன் பால கணபதி ராமநாதபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். தமிழக முழுவதும் உள்ள மாவட்டம்தோறும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன் அடிப்படையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்துள்ள அரசு திட்ட பணிகள், புதிய பணிகளுக்கான அடிக்கல் நாட்டுதல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதல் உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்து கொள்ள வரும் 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்கள் அரசு முறை பயணமாக ராமநாதபுரத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார். இந்நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொது செயலாளர் பொன்.பாலகணபதி, திமுக கட்சி தேர்தல் வாக்குறுதியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஆர்எஸ் மங்கலம் கண்மாய் மற்றும் ராமநாதபுரம் பெரியகண்மாய் ஆகியவற்றை சீரமைத்து தூர்வாரி தருவதாக வாக்குறுதி அளித்தது ஆனால் இதுவரை கண்மாய் தூர்வாரப்படாமல் உள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்றால் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் மீனவர்களுக்கு சிங்காரவேலன் மீனவர் நலத்திட்டத்தின் கீழ் 2 லட்சம் வீடுகள் கட்டி தரப்படும் என வாக்குறுதி அளித்தனர் ஆனால் இதுவரை மீனவர்களுக்கு சிங்காரவேலன் மீனவர் நலத்திட்டத்தின் கீழ் ஒரு வீடு கூட திமுக அரசு கட்டிக் கொடுக்கவில்லை. ஆனால் பிரதமர் வீடு திட்டத்தின் கீழ் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதியின் கீழ் மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு வருவதுடன், 2010 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ஏற்றுமதி சிறப்பு திட்டத்தின் கீழ் மிளகாய் மீன் உள்ளிட்டவற்றை ஏற்றுமதி செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது ஆனால் தற்போது வரை அது பயன்பாட்டிற்கு வரவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் விளைவிக்கப்படும் புவிசார் குறியீடு பெற்ற குண்டு மிளகாய் மற்றும் மீன்கள் நேரடியாக ஏற்றுமதி செய்ய முடியவில்லை. மேலும் ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் ஒதுக்கீடு செய்வதில் சட்டமன்ற உறுப்பினர் சிண்டிகேட் அமைத்துக் கொண்டு ஒரு தலைப்பட்சமாக திமுகவினருக்கு கடை ஒதுக்கியுள்ளார், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் மகன் மீது மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் முதல் முறையாக என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணி நடைபெறவில்லை என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செங்கலை எடுத்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ஆனால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திமுக சார்பில் வளர்ச்சி பணிக்காக ஒரு பிடி மண் கூட எடுத்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டினார் எனவே, ராமநாதபுரம் மாவட்டத்திற்கு திமுக அளித்து வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாததால் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் தமிழக முதல்வர் ஸ்டாலினை கண்டித்து பாஜக சார்பில் கருப்பு கொடி காட்டப்படும் என தெரிவித்தார். அண்ணாமலை புதிய கட்சி தொடங்கப் தொடர்ந்து இருக்கிறாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தவர், பாஜக நிர்வாகிகள், கட்சியினர் யாரும் இதுவரை அப்படிப்பட்ட தகவல்களை பெறவில்லை ஊடகங்கள் மட்டுமே அண்ணாமலை புதிய கட்சியை தொடங்க போவதாக செய்திகள் வருவதாக தெரிவித்தார்.
Next Story





