கோவையில் சட்டக் கல்லூரி மாணவி ஆடை குறித்து கேலி – காவல் நிலையத்தில் புகார்!

கோவையில் சட்டக் கல்லூரி மாணவி ஆடை குறித்து கேலி – காவல் நிலையத்தில் புகார்!
X
பூமார்க்கெட்டில் நடந்த அவமதிப்பு – 6 பேருக்கு எதிராக மாணவி புகார்.
கோவை பூமார்க்கெட் பகுதியில் ஓவிய பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சட்டக் கல்லூரி மாணவி, தனது ஆடையை பார்த்து கேலி செய்து தொந்தரவு செய்ததாக 6 பேருக்கு எதிராக கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். வீரபாண்டி அருகே நாயக்கனூர் அண்ணாநகரைச் சேர்ந்த ஜனனி (20) என்பவர் அளித்த புகாரில், நான் சட்டக் கல்லூரி மாணவி. கடந்த 21-ஆம் தேதி பூமார்க்கெட் பகுதியில் பயிற்சி முடித்து வெளியேறியபோது, முத்துராமன் என்பவர் என் உடையை பார்த்து ஆபாசமாக பேசியதோடு, அவருக்கு ஆதரவாக சிலர் இணைந்து என்னையும் என் நண்பரையும் தாக்க முயன்றனர். என் செல்போனை பறிக்கும் நோக்கத்துடன் அச்சுறுத்தியும், பொது இடத்தில் பாலியல் ரீதியான தொல்லை கொடுத்தும் அவமானப்படுத்தினர் என்று கூறியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story