கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் மனு !

கோவை பூ மார்க்கெட் வியாபாரிகள் மனு !
X
யூடியூப், ரீல்ஸ் படப்பிடிப்பு வியாபாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு – நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச்சங்கம் சார்பில், கோவை பூ மார்க்கெட்டில் யூடியூப் மற்றும் ரீல்ஸ் படப்பிடிப்பு தொடர்பாக மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. நவராத்திரி விசேஷம் காரணமாக மார்க்கெட்டில் வியாபாரம் நடந்து கொண்டிருந்த நேரத்தில், யூடியூபர்கள் மற்றும் வீடியோகிராபர்கள் வீடியோ எடுத்து வியாபாரிகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும், முழு வீடியோவை வெளியிடாமல் வியாபாரிகளை தவறாக சித்தரித்ததாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. விழாக்காலங்களில் இப்படியான வீடியோ எடுப்புகள் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் சிரமம் ஏற்படுத்துவதாக கூறி, இதை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story