கோவையில் இசைக்கலைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு !

வீட்டுமனை, வேலை வாய்ப்பு, இலவச வாத்திய கருவிகள் வழங்க வேண்டும் என கோவை ஆட்சியரிடம் மனு.
சரஸ்வதி துணை நாதஸ்வரம், தவில் இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 30க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். இலவச வீட்டுமனை, பேருந்து கட்டணத்தில் முழு சலுகை, கோவில்களில் நிரந்தர வேலை வாய்ப்பு, இலவச வாத்திய கருவிகள் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, அவர்கள் நாதஸ்வரம், தவில் வாசித்து கவனம் ஈர்த்தனர். கேரள மாநில செண்டை மேளம் போன்ற இசைக்கருவிகள் தமிழக நிகழ்ச்சிகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், பாரம்பரிய தமிழ் இசைக்கலைஞர்கள் பாதிக்கப்படுவதாகவும், இதனால் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் சங்கத்தினர் தெரிவித்தனர். அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, கலைஞர்களுக்கு வீடு, வேலை உள்ளிட்ட நலன்களை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
Next Story