குமரி : தாய், கள்ள காதலனுக்கு ஆயுள் தண்டனை

குமரி : தாய், கள்ள காதலனுக்கு ஆயுள் தண்டனை
X
15 மாத குழந்தை கொலை
குமரி மாவட்டம்  தூத்தூர் இரயுமன்துறை பகுதியை சேர்ந்தவர் பிரபுஷா ( 23). திருமணமான இவருக்கு  2 மகன்கள் உண்டு.  பிரபுஷா வீட்டின் அருகே ஓட்டல் நடத்தி வந்த காஞ்சாம்புறத்தைச் சேர்ந்த சதாம் உசைன் (32) என்பவருக்கும், பிரபுஷாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சதாம் உசைன் ஏற்கனவே மனைவி மற்றும் குழந்தைகளைப் பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதனால் பிரபுஷாவை அவருடைய கணவர்  பிரிந்து முதல் குழந்தையை  தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார். இளைய மகனான பிறந்து 15 மாதங்களே ஆன அரிஸ்டோ பியூலஸ் என்ற குழந்தை பிரபுஷாவுடன் இருந்தான். கடந்த 14-11-2023 அன்று மயிலாடியில் உள்ள கோழிப்பண்ணையில் 2 பேரும் வேலைக்குச் சேர்ந்தனர்.  அப்போதும் சதாம் உசைனும், பிரபுஷாவும் உல்லாசமாக இருந்தபோது குழந்தை அழுது தொந்தரவு செய்ததால்  அரிஸ்டோ பியூலசை கம்பால் சதாம் உசைன் பலமுறை தாக்கி, தரையில் வீசி எறிந்ததால்    குழந்தை இறந்துவிட்டது. .   அஞ்சுகிராமம் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன்  குற்றம் சாட்டப்பட்ட சதாம் உசேன் மற்றும் பிரபுஷாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு தரப்பில்வக்கீல்  லீனஸ்ராஜ் ஆஜரானார்.
Next Story