கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை 

கூலி தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை 
X
சுசீந்திரம்
சுசீந்திரம் மேலத்தெருவை சேர்ந்தவர் புருசோத்தமன் (39). கூலித் தொழிலாளி இவர் மது பழக்கத்தால் வேலைக்கு சரிவர செல்லாமல் மது குடித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதால் அவரது மனைவி  பவானிக்கும் புருசோத்தமனுக்கும் இடையே சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படுள்ளது. இந்நிலையில் மது குடிக்க மனைவி பவானி பணம் கொடுக்காததால் உள்ள மனவேதனையில் இருந்த புருசோத்தமன், நேற்று முன்தினம் இரவு வீட்டில் வைத்து விஷ மருந்தை குடித்துள்ளார். உறவினர்கள் புருசோத்தமனை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றுள்ளனர், அங்கு பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே புருசோத்தமன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். சுசீந்திரம்  போலீசார்  வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story