அபிஷேக புனித நீர் யானை மீது ஊர்வலம்

X
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவில் 10 நாட்களும் அம்ம னுக்கு நடைபெறும் அபிஷே கத்துக்குரிய புனித நீர் விவேகானந்தபுரத்தில் உள்ள சக்கர தீர்த்த காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள கிணற்றில் இருந்து வெள்ளிக்குடத்தில் எடுத்து நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து அர்ச்சகர் பகவதி அம்மன் கோவிலுக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வருவது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு நவராத்திரி திருவிழாவுக்கு வனத்துறையின் சில கட்டுப்பாடுகளின் காரணமாக யானை பயன்படுத்தப்படாமல் இருந்து வந்தது. இந்த ஆண்டு பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி வெள்ளி குடத்தில் எடுத்து நெற்றிப்பட்டம் அணிவித்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது வைத்து மேள தாளங்கள் முழங்க அர்ச்சகர் கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் எம். எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம் ஆர் . காந்தி, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா துணை தலைவர் அனுமந்த ராவ், பா.ஜ., மாவட்ட தலைவர் கோபகுமார், உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

