திருச்செங்கோடு சட்டையம்புதூர் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பொதுமக்களின் பங்குத் தொகை நகரமன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் வழங்கப்பட்டது

X
Tiruchengode King 24x7 |25 Sept 2025 2:21 PM ISTதிருச்செங்கோடு 17வது வார்டு சட்டையம் புதூர் பகுதியில் தெரு எண் 1 மற்றும் 5 ல் நமக்கு நாமே திட்டத்தில் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்க பொதுமக்கள் பங்களிப்பான மூன்றில் ஒரு பங்கு தொகை ரூ 80 ஆயிரத்திற்கான காசோலையை பொதுமக்கள் சார்பில் நகர் மன்ற தலைவரிடம் வழங்கப்பட்டது
திருச்செங்கோடு நகராட்சியில் 17 வது வார்டு பகுதியில் உள்ள சட்டையம் புதூர் தெரு எண் ஒன்று மற்றும் ஐந்தில் நீண்ட நாட்களாக கான்கிரீட் சாலை அமைக்க வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில்நமக்கு நாமே திட்டத்தில் கான்கிரீட் சாலை அமைக்க முடியுமென நகர்மன்ற தலைவர்நளினி சுரேஷ் பாபு நகர் மன்ற உறுப்பினர்திவ்யா வெங்கடேஸ்வரனிடம் கூறியிருந்த நிலையில் அதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு இரண்டு லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைக்கமுடிவு செய்யப்பட்டது அதன்படி நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் செலுத்த வேண்டிய மூன்றில் ஒரு பங்களிப்பு தொகையானரூ 80 ஆயிரத்திற்கான காசோலையை நகர் மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபுவிடம் நகர மன்ற உறுப்பினர்திவ்யா வெங்கடேஸ்வரன் வழங்கினார். நகராட்சி வளாகத்தில் உள்ள நகர மன்ற தலைவர்அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் வாசுதேவன்,பொறியாளர் சரவணன் துப்புரவு அலுவலர் சோழராஜ் நகர் மன்ற உறுப்பினர்கள் சண்முக வடிவு செல்வி ராஜவேல் செல்லம்மாள் தேவராஜன்,தாமரைச்செல்வி மணிகண்டன் புவனேஸ்வரி உலகநாதன்,ராதா சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story
