மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: மேயரிடம் கோரிக்கை!

மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: மேயரிடம் கோரிக்கை!
X
தூத்துக்குடியில் மின்மாற்றியை இடமாற்றம் செய்ய வேண்டும்: மேயரிடம் இந்து முன்னணி கோரிக்கை!
தூத்துக்குடியில்,  தெப்பக்குளம் அருகே உள்ள இரண்டு மின்மாற்றிகளை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராகவேந்திரா மற்றும் நிர்வாகிகள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் அளித்த மனுவில், "தூத்துக்குடி மாநராட்சியின் 39வது வார்டு தெப்பக்குளம் பகுதியை சுற்றி மக்கள் நடைமேடை மாநகராட்சியிலிருந்து அமைக்கப்படுகிறது. இதில் இரண்டு மின்மாற்றி (டிரான்ஸ்பார்ம்) தெப்பக்குளம் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவிலுக்கு எதிரே அமைந்துள்ளது.  திருவிழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாகவும், பக்தர்களின் இருசக்கர வாகனங்கள் திருக்கோவிலிருந்து சப்பரம் வெளிவருவதற்கும் நிறுத்துவதற்கும். இடையூறாக உள்ளது. அதனால் இரண்டு மின்மாற்றிகளையும் கிழக்கு பக்கம் இடம் மாற்றி வைத்து திருக்கோவிலின் எதிரே உள்ள பகுதியை இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதி செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story