கரூர்-ஒரு மணி நேரம் கழித்து சந்திப்பதாக கூறியதால் செய்தியாளர்கள் ஏமாற்றம்.
கரூர்-ஒரு மணி நேரம் கழித்து சந்திப்பதாக கூறியதால் செய்தியாளர்கள் ஏமாற்றம். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக அனுமதி வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்லி ஆனந்த் தலைமையில் கட்சியினர் மனு அளித்தனர். அந்த மனுவில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட லைட் ஹவுஸ் மற்றும் உழவர் சந்தை பகுதியில் ஏதேனும் ஒன்றை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்டனர். விஜய் பிரச்சாரத்திற்கு வரும்போது அதிக அளவில் மக்கள் கூடுவதால் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில் கொண்டு பரிசீலனை செய்து தெரிவிப்பதாக எஸ்பி அலுவலகத்தில் தெரிவித்ததால் அலுவலகத்தை விட்டு புஸ்லி ஆனந்த் வெளியேறி வந்தார். வெளிவந்தவுடன் அவர் பேட்டி தருவார் என செய்தியாளர்கள் காத்திருந்த நிலையில் ஒரு மணி நேரம் கழித்து செய்தியாளர்களை சந்திப்பதாக கூறியதால் செய்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
Next Story





