தேனியில் சுமார் ஒரு மணி நேரமாக பெய்த கனமழை - பேருந்து நிலையத்தில் வெளுத்து வாங்கிய கன மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரால் பொதுமக்கள் அவதி
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்தது இதனால் மாலை நேரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகவே இருந்ததால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.இந்த நிலையில் இன்று காலையில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் தேனி மாவட்டம் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்யத் தொடங்கி சிறிது நேரத்தில் கனமழையாக மாறி வெளுத்து வாங்கியது.தேனி, அரண்மனை புதூர், அல்லிநகரம், அன்னஞ்ஜி, வடபுதுபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வந்தது இதனால் வெயிலில் தாக்கம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்படுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தேனி புதிய பேருந்து நிலைய பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையினால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது இதனால் பேருந்து நிலையத்தில் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக காத்திருந்த பயணிகள் அவதிக்குள்ளாகினர்.மேலும் நீர் நிலைகளில், ஆறுகளில் நீர் வரத்து வர தொடங்கியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story



