திருமருகல் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப்பணிகள்

ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் நேரில் ஆய்வு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை, ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர் சுகந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில், கீழப்பூதனூர் ஊராட்சி நத்தம் கிராமத்தில் 2025- 2026 நாகை சட்ட மன்ற பேரவை உறுப்பினர் முகம்மது ஷா நவாஸ் நிதியின் கீழ் ரூ.8லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்டும் பணியையும், திருக்கண்ணபுரத்தில், 15 - வது நிதி குழு (சுகாதாரம்) மானியத்தில் ரூ.1 கோடியே 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தையும், எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடியில் உள்ள ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில், 2024 - 2025 நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.34.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பணியையும், தொடர்ந்து பனங்குடி ஊராட்சியில் உபரி நிதி மூலம் 800 அடியில் ஆழ்துளை கிணறு (போர்வெல்) அமைக்கும் பணியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், சுப்பிரமணியன் (கிராம ஊராட்சி), ஊராட்சி ஒன்றிய பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்,
Next Story