வெவ்வேறு கொலை வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு.
தேனி மாவட்டம் வருசநாடு வருகே உள்ள கீழ பூசலத்து கிராமத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு சதீஷ்குமார் (வயது 35) என்ற இளைஞர் அதே ஊரைச் சேர்ந்த லட்சுமணன் என்ற இளைஞர் தூங்கிக் கொண்டிருந்த போது கல்லால் அடித்து கொலை செய்த வழக்கில் சதீஷ்குமார் என்ற இளைஞர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே .நடராஜன் தீர்ப்பு வழங்கி உள்ளார். இதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆண்டிபட்டி அருகே உள்ள ராஜதானி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மஞ்ச நாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாபு என்ற இளைஞரும் அவரது நண்பரான ராஜேஷ் என்ற இளைஞரும் சேர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் ராஜேஷ் கொலை செய்யப்பட்ட வழக்கில் பாபு என்ற இளைஞர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதம் விதித்து தேனி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சொர்ணம் ஜே .நடராஜன் தீர்ப்பு வழங்கி உள்ளார். மேலும் இந்த தீர்ப்பினை அடுத்து குற்றவாளிகளை சிறையில் அடைக்க காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்றனர்.
Next Story



