மழைநீர் வடிகால் பணி: அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு

X
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை அமைச்சர் பெ.கீதாஜீவன் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி, காமராஜ் கல்லூரி அருகே நடைபெற்று வரும், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை மாநில சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலருமான பெ. கீதாஜீவன் புதன்கிழமை பார்வையிட்டார். நிகழ்வில், மாநகர திமுக செயலர் ஆனந்த சேகரன், பகுதிச் செயலர்கள் ராமகிருஷ்ணன், ஜெயக்குமார், மாமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், வட்டச் செயலர் நவநீதன், வட்ட பிரதிநிதி ரஜினி முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Next Story

