கரூர் -உங்களுடன் ஸ்டாலின் திட்டம் புறக்கணித்து கலெக்டர் ஆபீசில் காத்திருப்பு போராட்டம்.
கரூர் -உங்களுடன் ஸ்டாலின் திட்டம் புறக்கணித்து கலெக்டர் ஆபீசில் காத்திருப்பு போராட்டம். வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட பணிகளை முற்றாக புறக்கணித்து மாவட்ட வட்ட தலைநகர் பகுதிகளில் காத்திருப்பு போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர். இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் தலைமையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மத்திய செயற்குழு உறுப்பினர் ஓபிஆர்செந்தில்மாவட்ட துணைத் தலைவர் சக்திவேல் மாவட்ட செயலாளர் அருண் வட்டக்கிளை பொறுப்பாளர்கள் பார்த்திபன் கேசவன் உள்ளிட்ட வருவாய் துறையினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் உடனடியாக செயல்படுத்த முடியாத பல்வேறு குறைகளை சுட்டிக்காட்டி இந்த போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர்.
Next Story





