வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலையில் செல்லும் குடிநீர்

வைகை அணை கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாக சாலையில் செல்லும் குடிநீர்
X
குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பத்து நாட்களான நிலையில் உடைத்தது சரி செய்யாத குடிநீர் வாரிய அதிகாரிகள்
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து கூட்டுக் குடிநீர் மூலம் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இதன் ஒரு பகுதியாக பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இந்த நிலையில் பெரியகுளம் அருகே உள்ள வடுகபட்டி பேரூராட்சி பகுதியில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாக சாலையில் சென்று வருகிறது.மேலும் இந்த குழாய் உடைப்பால் சாலை சேதமடைவதோடு வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.எனவே குடிநீர் வாரிய அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.இப்ப பிரச்சனை குறித்து வைகை அணை கூட்டுக் குடிநீர் வடிகால் உதவி செயற்பொறியாளர் செல்வியிடம் கேட்டபோது குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
Next Story