ஓசூர் அருகே காரில் கடத்திய குட்கா பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் மத்திகிரி போலீசார் கொத்தகொண்டப்பள்ளி கர்நாடக சோத னைச்சாவடி அருகே நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற ஒரு காரை சோதனையிட்டதில் அதில் காருக்குள் 125 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் நடத்திய விசாரணை மேற்கொண்டதில் பெங்களூருவில் இருந்து காரில் ஒசூருக்கு குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த புகையிலை பொருட்களையும், காரையும் போலீசார் பறிமுதல் செய்து ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் பகுதியை சேர்ந்த சுதாகர் (44) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story

