காலிபாட்டில் திரும்ப பெரும்‌ திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்திடகோரி ஆர்ப்பாட்டம்.

காலிபாட்டில் திரும்ப பெரும்‌ திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்திடகோரி விசிகவின் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணி மற்றும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் நீதி நாயகம் தலைமையில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் காலிபாட்டில் திரும்ப பெறுவதற்கு தனியாக இடம் ஒதுக்கி புதிய பணியாளர்களை நியமனம் செய்திட வேண்டும், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரப்படுத்தி அரசு ஊழியர்களாக அறிவித்திட வேண்டும், டாஸ்மாக் கடை செயல்படும் நேரத்தை மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி ஆக குறைத்திட வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் மாவட்ட செயலாளர் நீலவானத்து நிலவன், டாஸ்மாக் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story