”திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” பெற மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

”திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” பெற மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
X
திண்டுக்கல் மாவட்டத்தில் ”திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” பெற மாணவ, மாணவியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தகவல்
உலகப் பொதுமறையாம் திருக்குறளில் உள்ள கருத்துக்களை மாணவ, மாணவியர் அறிந்து கொண்டு கல்வி அறிவுடன் நல்ல ஒழுக்கம் மிக்கவர்களாக விளங்கச் செய்யும் வகையில் 1330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் திறன் பெற்ற மாணவ, மாணவியருக்கு ரூ.15,000/- பரிசும் பாராட்டுச் சான்றிதழும் ஆண்டுதோறும் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பெற்று வருகிறது. “திருக்குறள் முற்றோதல் பாராட்டுப் பரிசு” என்ற பெயரில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இத்திட்டத்தின் கீழ் 2025-26ஆம் ஆண்டிற்கு திண்டுக்கல் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கூடுதல் விவரங்களுக்கு மாவட்டத் தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர், தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திண்டுக்கல். 0451-2461585 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
Next Story