அரசு கலைக் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

X
Komarapalayam King 24x7 |25 Sept 2025 6:42 PM ISTகுமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் வழிகாட்டுதலின்படி நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு இணைந்து பேரிடர் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் கல்லூரி முதல்வர் சரவணாதேவி தலைமை வகித்தார். தேசிய பேரிடர் மேலாண்மை குழுவின் உதவி ஆய்வாளர் குல்தீப் யாதவ், தலைமை காவலர் ரஞ்சித் குமார், காவலர் இசக்கிமுத்து மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் பங்கேற்று, மாணவர்களுக்கு பேரிடர் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பயிற்சிகளை வழங்கினார்கள். சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்பது,. ஆம்புலன்ஸ் வரவழைப்பது, லாவகமாக தூக்கி படுக்க வைத்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தல், ஆற்றில் வெள்ளம் வந்தால், அதிக சிக்கியவர்களை மீட்பது என்பது உள்ளிட்ட பயிற்சிகள் செயல்முறை விளக்கம் வழங்கப்பட்டது. இதில் வணிகவியல் துறை தலைவர் ரகுபதி, தமிழ்த்துறை தலைவர் முரளிதரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ரமேஷ் குமார், அனைத்து பேராசிரியர்கள், மாணாக்கர்கள் உள்பட பலரும் பங்கேற்றனர்.
Next Story
