உடல்நலம் சரியில்லாமை, மன உளைச்சலில் தூக்கு மாட்டி தம்பதியர் தற்கொலை
Komarapalayam King 24x7 |25 Sept 2025 6:45 PM ISTகுமாரபாளையத்தில் உடல்நலம் சரியில்லாமை, மன உளைச்சலால் தூக்கு மாட்டி தம்பதியர் தற்கொலை செய்து கொண்டனர்.
குமாரபாளையம் அருகே குளத்துக்காடு பகுதியில் வாடகை வீட்டில் கேசவராஜ், 55, சாந்தி, 52, வசித்து வந்துள்ளனர். அவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள். மூன்று பெண் பிள்ளைகளுக்கும் திருமணம் நடைபெற்ற நிலையில் தம்பதியர் இருவரும் கடந்த ஐந்து வருடங்களாக தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் சாந்திக்கும் கேசவராஜுக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் வேலைக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வருவாய் இழப்பு காரணமாக தவித்து வந்தனர். மனம் உடைந்து அடிக்கடி இருவரும் தற்கொலை செய்து கொள்வதாக அக்கம் பக்கத்தில் கூறியுள்ளனர்.iஇந்த நிலையில் நேற்று காலை 09:00 மணி ஆகியும், சாந்தி, கேசவராஜ் தம்பதி வசித்த வீடு திறக்கப்படாமல் இருந்ததால், சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டுச் சேர்ந்த உமா என்ற பெண், கதவை தட்டி பார்த்ததில் , எந்த பதிலும் இல்லாததால், அருகில் உள்ளவர்கள் இணைந்து கதவை உடைத்துப் பார்த்துள்ளனர். அப்பொழுது சாந்தி கேசவராஜ் தம்பதியினர் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து குமாரபாளையம் போலீசாருக்கு தகவல் அளித்ததின் பேரில், இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் நேரில் வந்து சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .
Next Story



