ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக தருவதாக கூறிய விவசாயி

X
Komarapalayam King 24x7 |25 Sept 2025 6:46 PM ISTகுமாரபாளையம் அருகே விவசாயி ஒருவர் ஒரு லட்சம் பனை விதைகளை இலவசமாக தருகிறேன் என கூறியுள்ளார்.
குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் பகுதியில் வசிப்பவர் விஸ்வநாதன், 34. விவசாயி. இவர் பல்வேறு பகுதிகளில் 20 ஆயிரத்திற்கும் மேலான பனை விதைகள் விதைத்து, மரங்கள் வளர்த்துள்ளார். இவர் வல்வில் ஓரி நண்பர்கள் மன்றம் பசுமை குழு எனும் அமைப்பில் உள்ளார். நண்பர்களுடன் சேர்ந்து பனை விதைகள் விதைத்து பனை மர வளர்ப்பில் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்ட அளவில் ஒரு கோடி பனை விதை நடும் திட்டத்தில், மாவட்ட கலெக்டர் உமா நேரில் வந்து, 5 ஆயிரம் பனை விதைகள் நடும் பணியை .வீரப்பம்பாளையம் பகுதியில் துவக்கி வைத்தார். தற்போது தமிழக அரசு சார்பில் 6 கோடி பனை விதை நடும் திட்டம் அறிவித்து உள்ளனர். இதற்கு, பனை விதை நடுவதில் ஆர்வம் உள்ள நபர்களுக்கு , ஒரு லட்சம் பனை விதைகள் இலவசமாக தருகிறேன் என இவர் கூறியுள்ளார். இவரது மொபைல் எண்: 9524976864. பனை விதை தேவைப்படுவோர் இவரை தொடர்பு கொண்டு பனை விதைகளை இலவசமாக பெறலாம்.
Next Story
