வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு.

X
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஒன்றரை வயது குழந்தைக்கு தடுப்பூசி போட்டதால் குழந்தை உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றச்சாட்டு. ஆலங்காயம் - வாணியம்பாடி செல்லும் சாலை மறியல்.. போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் 20க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு.. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெருமாள்பேட்டை, ஊசிதோப்பு பகுதியைச் சேர்ந்த ஓட்டுனராக வேலை செய்யும் விக்னேஷ்குமார் இவரது மனைவி கிருத்திகா இவர்களது ஒன்றரை வயது மகன் பூமீஸ் என்ற குழந்தைக்கு நேற்று இந்திரா நகர் பகுதியில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் நடைபெற்ற முகாமில் நேற்று தடுப்பூச்சி போடப்பட்டதாகவும், பின்னர் வீட்டிற்கு அழைத்துச் சென்ற பெற்றோர்கள் அங்கு குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது அதற்காக மருத்துவமனையில் கொடுத்த மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளனர். பின்னர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்து குழந்தை இன்று அதிகாலை இலாத நிலையில் இதனால் அதிர்ச்சடைந்த பெற்றோர்கள் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர் அங்க பரிசுத்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாகவும் கூறியுள்ளனர் அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்துள்ளனர் அதனை தொடர்ந்து உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டு பின்னர் சொந்த ஊருக்கு எடுத்து வந்தபோது குழந்தை இறப்புக்கு நீதி கேட்டு வாணியம்பாடி - ஆலங்காயம் செல்லும் சாலையில் உறவினர்கள் பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் அதனை தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடியவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இருந்த போதிலும் அவர்கள் சமாதானம் அடையாத நிலையில் காவல்துறைக்கும் உறவினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக கைது செய்த நிலையில் பரபரப்பு சூழ்நிலை ஏற்பட்டது அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story

