ராமநாதபுரம் வருவாய் சங்கத்தினர் உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு

வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம்வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரத்தில் காத்திருப்பு போராட்டம்- பணிகள் பாதிப்பு உங்களுடன் ஸ்டாலின் முகாம் புறக்கணிப்பு தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இந்த போராட்டத்தில் அனைத்து நிலைகளிலும் உள்ள அரசு ஊழியர்கள் பணிகளை புறக்கணித்துவிட்டு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் பொதுமக்கள் அரசு ஆவணங்கள் பெற முடியாமல் கடும் அவதி அடைந்தனர் ராமநாதபுரம் மாவட்டத்தில் சுமார் 800-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் தமிழக முழுவதும் சுமார் 42,000 ஊழியர்களும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் தங்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் உங்களுடன் ஸ்டாலின் முகாமை முற்றிலும் புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் வருகின்ற 29 30 ஆகிய இரண்டு நாட்கள் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரவுகை தரும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த கோரிக்கையை பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர் மேலும் ராமநாதபுரம் மாவட்ட முழுவதும் அரசு ஊழியர்களுக்கு கூடுதலான பணி சுமைகள் ஏற்பட்டுள்ளதால் பரமக்குடி பகுதிக்கு உட்பட்ட நயினார் கோவில் அல்லது சத்திரக்குடி ஆகிய பகுதியை குறித்து தனி வட்டம் உருவாக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது
Next Story