முதல்வர் பற்றி கவிதை பாடிய மாணவி ஸ்வீட் ஊட்டி விட்ட அமைச்சர்

முதல்வர் பற்றி கவிதை பாடிய மாணவி ஸ்வீட் ஊட்டி விட்ட அமைச்சர்
X
முதல்வர் பற்றி கவிதை பாடிய மாணவி ஸ்வீட் ஊட்டி விட்ட அமைச்சர் சாமிநாதன் பாராட்டு
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிய கட்டிட துவக்க நிகழ்ச்சி மற்றும் ஒழுங்குமுறை விற்பனை கூட கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் பங்கேற்றார், தொடர்ந்து முத்தூர் பள்ளி கட்டிடத்தை துவக்கி வைக்க வந்த போது மாணவ மாணவிகள் உற்சாக வரவேற்பு கொடுத்து காலை சிற்றுண்டி திட்டத்தை வழங்கிய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோருக்கு பாராட்டு கடிதம் எழுதி மாணவி படித்தார், அதனை ரசித்த தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் மு. பெ . சாமிநாதன் அந்த மாணவிக்கு ஸ்வீட் ஊட்டி விட்டு ஊக்குவித்தார்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் சாமலாபுரம் பகுதியில் பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிசாமி என்பவர் அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் பழனிசாமி என்பவரை விபத்து ஏற்படுத்தி கொலை செய்ததாக சிறையில் உள்ள நிலையில் அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு அவர் மீது வழக்கு பதிந்தாலும் நீதிமன்றத்தில் தண்டனை நிறுபணமாகவில்லை அவ்வாறு ஆகும் போது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிலளித்தார், அதனைத் தொடர்ந்து இன்று நடைபெறும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தலைமையில் கல்வி மாநாடு இரு மொழி கொள்கையை வலியுறுத்தி மும்மொழி கொள்கையை வலியுறுத்தியா? கேள்விக்கு மும்மொழி என்பது அவர் அவர்களுடைய இஷ்டம் என்றும் ஹிந்தியை திணிக்க முடியாது என்றும் மூன்று மொழி அல்ல 30 மொழி வேண்டுமானாலும் மக்கள் பயிலலாம் அது அவர்களுடைய இஷ்டம் என்றார்.
Next Story